வாய்மையே வெல்லும்

bookmark

திருடன் 1 : அந்த வக்கீலை நம்ம கேசு நடத்தவிட வேண்டாம்னு சொல்றீயே! ஏன்?

திருடள் 2 : வீட்டு வாசல்லே வாய்மையே வெல்லுமின்னு போர்டு மாட்டிருக்காரே! பிறகு இவர் எதுக்கு?

"சார்.... கொஞ்சம் வண்டியை நிறுத்துறீங்களா?"

"கொஞ்சமெல்லாம் முடியாது... முழுசாத்தான் நிறுத்தலாம்!"

"அந்தாளு குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருக்காருன்னு எப்படிச் சொல்றே?"

"என்னைப் பாத்திட்டு நீங்க ரெண்டுபேரும் டுவின்சான்னு கேக்குறாரு."

"அந்த இன்ஜினீயர் தன் தொழில் புத்தியைக் குடும்ப விஷயத்திலேயும் காட்டிட்டாருன்னு எப்படிச் சொல்றே?"

"தன் பையனுக்குப் பெண் தேர்வு செய்ய டெண்டர் விட்டுட்டாரு!"

மனைவி: என் தம்பியை எப்படியாவது வெளியே கொண்டுவர ஏற்பாடு பண்ணுங்க.

போலீஸ்: சரி சரி... மாமூல் எவ்வளவு கொடுப்பே?