வாயில்லா பிராணி

bookmark

"ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?"

"ஏன்னா.. அது வாயில்லா பிராணி சார்!"

ஒருவன்: தொண்டர்களின் கன்னம் எல்லாம் வீங்கியிருக்கின்றதே.... ஏன்?

தொண்டர்: தலைவர் "அறை" கூவல் விடுத்தார்ல அதான்.......

சிலந்தி 1: ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது?

சிலந்தி 2: அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்.......

தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?

மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்......

"என்னப்பா காபியில 'ஈ' செத்துக்கிடக்குது...?"

"ஸ்பெஷல் காபியிலதான் சார் 'ஈ' உயிரோட இருக்கும்"