வறுமையில் வாழ்தல்

வறுமையில் வாழ்தல்

bookmark

இட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்ததாக பதிவெடுகள் கூறுகின்றது. இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வறுமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழக்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.