லாலா லஜுபது ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்
இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை. பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதாலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.
சான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார். ஏப்ரல் 8 அன்று , போலீஸ் படைகளுக்கு எல்லை அற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்ட மன்றம் கூடி இருந்தது.
பகத் சிங் மற்றும் அவரது தோழர் பட்டுகேஸ்வர் தத் ஆகிய இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் " இன்குலாப் ஜிந்தாபாத் , ஏகாதிபத்தியம் ஒழிக" என்று கூறிய படி குண்டுகளை வீசினார்கள். குண்டுகளை வீசிவிட்டு அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பதில் , தாங்களாக முன்வது கம்பீரமாக சரணம் அடைந்தார்கள். உண்மையான்ன புரட்சி என்பது உண்மையில் மக்களைக் கொள்வது அல்ல என்பதை பகத் சிங்க் அறிந்திருந்தார். அதனால் தான், மக்கள் இல்லாத இடமாகப் பார்த்து குண்டுகளை வீசினார். நீதிமன்றத்தில் கூட வெள்ளைக் கார நீதிபதி , இது பற்றி கேட்க " கேளாத ஆங்கிலேயர்களின் செவிட்டுக் காதுகளுக்கு உரைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம்" என்று கம்பீரமாக நீதிமன்றத்திலேயே சொன்னாராம் பகத் சிங்க். அது மட்டும் இல்லை விசாரணையின் போது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர்.
கடைசியாக ஆங்கிலேயர்களின் அந்த நீதி மன்றம் பகத் சிங், உட்பட அவரது கூட்டாளிகளான சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், இதில் கொடுமை என்ன என்றால் ,பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்கு தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரத்தில் நமது தேசப் பிதா, என்று எல்லோராலும் அன்புடன் சொல்லப்படும் காந்திஜி கையொப்பம் இட்டார் . இது வரலாற்றில் கருமை நிறத்தில் பதிக்கப்பட்டுள்ள உண்மை நிகழ்ச்சி .
தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் கூட இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.
பகத் சிங்கின் தூக்கு தண்டனைக் காலம் நெருங்கியது. பகத் சிங்கின் அப்பா பிரிட்டிஷ் அரசிடம் மகனை மன்னித்து விடுவியுங்கள் என்று கருணை மனு அளித்தார். தனது தந்தையின் இந்த செயலை கேள்விப்பட்ட பகத் சிங்க் " இனி நான் உங்களை எனது தந்தை என்று கூற மாட்டேன். இனி நமக்குள் இருந்த உறவு முறிந்தது" என்று கடிதம் எழுதுகிறார். அதுபோல, பகத் சிங்க் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் "அம்மா எனது பிணத்தை வாங்க வராதே, வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழ வேண்டிய தாக்கம் எழாமல் போய்விடும்" என்று எழுதிகிறார். இதனைப் படித்த பகத் சிங்கின் தாய்க்கு அக்கடிதம் கண்ணீரையே வரவழைத்தது
