ராகுல் டிராவிட்

bookmark

ராகுல் டிராவிட், இவரைப் பற்றி அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவின் துடுப்பாளர். 1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கைத் துடுப்பாளர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள டிராவிட் உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தூரில்,பிறந்தார்.இவர் கர்நாடகாவில் வாழும் ஒரு மகாராஷ்டிரிய தேஷஸ்தா குடும்பத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஐயர்கள் ஆவர். அவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வளர்ந்தார்.அவர் மராத்தி மற்றும் கன்னட மொழிகளை பேசுவார். அவருக்கு விஜய் என்ற ஒரு இளைய சகோதரர் உண்டு. இரண்டு சகோதரர்களும் எளிமையான நடுத்தர குடும்ப சூழலில் தான் வளர்ந்தனர். டிராவிடின் தந்தையார் ஜாம் மற்றும் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் கிசான் என்னும் நிறுவனத்தில் வேலை செய்ததால், பெங்களூரை சேர்ந்த செயின்ட் ஜோசப் பாய்ஸ் ஹை ஸ்கூலை சேர்ந்த அவரது நண்பர்கள் அவரை ஜாமி என்று செல்லமாக அழைத்தனர்.

அவரது தாயார் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையியல் பேராசிரியராக பணிபுரிந்தார். ராகுல் டிராவிட், கர்நாடகாவின் பெங்களூரில், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமெர்ஸ்-இல் வணிகவியல் பட்டம் பெற்றார். நான்கு மே 2003 அன்று அவர் நாக்பூரை சேர்ந்த Dr. விஜேதா பெண்தர்கர் என்ற அறுவை மருத்துவரை மணந்தார்.11 அக்டோபர் 2005 அன்று பிறந்த அவர் மகனுக்கு சமித் என்ற பெயரை சூட்டினர். 27 ஏப்ரல் 2009 அன்று அவரது இரண்டாவது மகன் அன்வே பிறந்தான்.

மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ரோபியில் விளையாட அவர் முதன் முதலில் பூனேயில் பிப்ரவரி மாதம் 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். (அப்போது அவர் பெங்களூரைச் சேர்ந்த புனித ஜோசப் வணிக கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்) இந்த போட்டியில் அவர் ஏழாவது நிலையில் வருங்கால சக அணி வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஆட்டத்தை சம நிலைப் படுத்தினார். அவரது முழு முதல் சீசன் 1991-92 ஆம் ஆண்டில் இருந்தது. அப்பொழுது அவர் இரண்டு சதங்களை அடித்து தொடர் முடிவில் சராசரி 63.3 க்கு 380 ரன்கள் எடுத்திருந்தார். இதன் பின்னர் டிராவிட் சவுத் சோனில் நடக்கின்ற துலீப் ட்ரோபியில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 வது உலக கோப்பையில்(1999), 461 ரன்களை அடித்து அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமை தேடிக்கொண்டார் டிராவிட். உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் ஆவார்.இவர் டான்டனில் கென்யாவுக்கு எதிராக 110 ரன்களையும் இலங்கைக்கு எதிராக 145 ரன்களையும் எடுத்தார். பின்னர் இந்த போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.இவர் 2003 உலக கோப்பையில் இந்திய இறுதி போட்டிக்கு சென்ற போது துணை கேப்டனாக இருந்தார். இவர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்தது இந்திய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இடம்பிடிக்க உதவியாக இருந்தது.

ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். திராவிட் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (185) பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார்.

வலுவான ஆட்ட நுட்பங்களை கொண்ட இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருந்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கூடிய டிபென்சிவ் பேட்ஸ்மேன் என்ற மாயை வலைக்குள் இருந்து டிராவிட், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ரன்களை மெதுவாக எடுத்தார். எதுவாகினும் அவரது ஆட்ட பாதையில் அவர் தன்னை மாற்றிக்கொண்டு ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களை எடுத்து ICC பிளேயர் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். ரீபாக் விளம்பரங்களில் வந்த 'தி வால்' என்ற அவரது செல்ல பெயர் அவரது திறனை குறிக்க இப்போது பெரிதும் உதவுகிறது. டிராவிட் 55.11 சராசரி கணக்கில் இதுவரை 26 சதங்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் அவர் எடுத்த ஐந்து இரட்டை சதங்களும் சேரும். ஒரு நாள் போட்டிகளில் அவர் 39.49 ரன், 71.22 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு வெளியே ஆடும் போட்டிகளில் சிறந்து விளையாட கூடிய ஒரு சில இந்திய வீரர்களுள் ஒருவர். இவரது ஆவரேக் இந்திய மண்ணில் ஆடுவதை விட சராசரியும்கடல் தாண்டி ஆடுவதில் பத்து ரன்கள் அதிகமாக இருக்கிறது. ஒன்பது ஆகஸ்ட், 2006, அன்று பார்க்கும் போது ட்ராவிடின் கடல் தாண்டிய டெஸ்ட் போட்டி சராசரி 65.28 இருந்தது. அவரது ஓவர் ஆல் சராசரி 55.41 ஆகவும் வெளிநாடுகளில் விளையாடிய ஒரு நாள் சர்வதேச போட்டிகளின் சராசரி 42.03 ஆகவும் அவரது ஓவர் ஆல் ODI சராசரி 39.49 ஆகவும் இருந்தது. இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் ட்ராவிடின் சராசரி டெஸ்ட் போட்டிகளில் 78.72 ஆகவும், ODI களில் 53.40 ஆகவும் இருக்கிறது.

இவரது இத்தனை சாதனைகளுக்கும் அவரது ஓயாத பயிற்சி தான் காரணம்; இளவயதில் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆனதும் அதே திசையில் ஆயிரம் முறை பந்துகளை அதிவேகமாக அடித்து பயிற்சி செய்தார்; வியர்வை சொட்டச் சொட்ட பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்பார். ராகுல் டிராவிட் ஒரு பட்டமளிப்பு விழாவில் இவ்வாறாக உரையாற்றி இருக்கிறார் " என் தலைமை ஆசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்டு என்னைக் கிரிக்கெட் ஆடவிடாமல் செய்து இருந்தால். நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கவே மாட்டேன். எனக்கு கிடைத்த நண்பர்களும் மிகவும் நல்லவர்கள். தேர்வுகளின் போது என் நண்பர்களின் குறிப்பு தான் எனக்கு மிகவும் உதவும்; அதனை அவசர அவசரமாகப் படித்து விட்டு தேர்வுகளை எழுதுவேன் நான். நல்ல மதிப்பெண்களும் கடவுள் புண்ணியத்தில் பெற்று விடுவேன். அக்காலத்தில் ரஞ்சிப் போட்டிகளில் ஆடிக் கொண்டு இருந்தேன். 19 வயதிற்கு உட்பட்டோர் இந்திய அணியின் கேப்டனாக ஆகி இருந்தேன். சிறந்த பந்து வீச்சுகளை சந்தித்து மிகவும் சிறப்பாக எனது சிறு வயதில் விளையாடினாலும். இந்திய அணிக்குள் என்னால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நுழைய முடியாமல் இருந்தது. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக் கொண்டு இருந்தேன். ஆனாலும் நான் நம்பிக்கை இழக்க வில்லை. எனக்குள் நான் இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டேன் அதாவது " கடவுள் தாமதப் படுத்துகிறார் என்பதால் கடவுள் தரவே மாட்டார் என்று அர்த்தம் இல்லை!" என்று. என் நம்பிக்கை வீண் போக வில்லை. இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்பிகிறேன், சீன மூங்கில் விதையை நிலத்தில் ஊன்றி தண்ணீர் விட்டுப் பாராமரித்து வாருங்கள், அது கண்டிப்பாக ஐந்து வருடங்கள் கழித்துத் தான் துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும். ஆனால், அது வளர ஆரம்பித்த பிறகு அதன் வளர்ச்சி மிகுதியாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அந்தச் சீன மூங்கில் விதை ஊன்றப்பட்ட அந்த ஐந்து ஆண்டுகள் தான் வான் உயர வளர தன்னை தாயார் படுத்திக் கொண்டு இருந்தது என்று தான் நான் சொல்வேன். அது போலத் தான் நானும், அந்த ஐந்து வருடங்கள் நான் என்னைத் தயார் படுத்திக் கொண்டு இருந்த காலம்" .