பேசும் முட்டாள்

bookmark

பேச்சாளர் ஒருவர் பேச்சைத் தொடங்கினார். பேச விடாமல் கூட்டத்தில் பலர் அவர் பேச்சில் குறுக்கிட்டுப் பேசிக் கொண்டே இருந்தனர். 

பொறுமை இழந்த அவர் இங்கே முட்டாள்கள் பலர் இருக்கிறோம். ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டாள் பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.

உடனே கூட்டத்திலிருந்து ஒரு குரல், பேச்சாளரைப் பேச விடுங்கள் என்று ஒலித்தது.