பெர்னார்ட் ஷா - 2
பெர்னாட் ஷா சிறிது காலம் வெஸ்லியன் கோன்னெக்ஸியல் (Wesleyan Connexional) ஸ்கூலில் படித்தார். அது மெத்தடிஸ்ட் நியூ கன்னெக்ஸியன் (Methodist New Connexion) நடத்தி வந்த இலக்கணப் பள்ளியாகும். அதற்குப் பின்னர் டால்கேவுக்கு அருகிலிருந்த ஒரு தனியார் பள்ளிக்குச் சென்றார். பின்னர் டப்ளின்'ஸ் செண்ட்ரல் ஸ்கூலுக்குச் சென்றார். டப்ளின் இங்கிலிஷ் சயிண்ட்டிஃபிக் அண்ட் கமெர்ஷியல் டே ஸ்கூலில் (Dublin English Scientific and Commercial Day School) தனது இறுதிக் கல்வியை முடித்தார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மேல் ஒரு பகை உணர்வு இருந்தது. அவர் கூறுகிறார்: "இப்போது நமக்குள்ள பள்ளிகளும் பள்ளி ஆசிரியர்களும், கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாக பிரபலமானவை அல்ல, மாறாக அவை சிறைகளாகவும் அவர்கள் சிறை அதிகாரிகளாகவுமே உள்ளனர். அங்கு தங்கள் பெற்றோர்களைத் தொல்லை செய்யாமலும் கவனிக்காமலும் இருப்பதற்காக குழந்தைகள் அடைத்து வைக்கப்படுகின்றனர்"[3] கேஷெல் பைரோன்'ஸ் (Cashel Byron's) ப்ரொஃபெஷன் என்னும் படைப்பில் இளம் பைரோனின் கல்வி பற்றிய கசப்பான அறிமுகம் பெர்னாட் ஷாவின் சொந்த பள்ளி நாள் அனுபவமே ஆகும். ட்ரீட்டிஸ் ஆன் பேரண்ட்ஸ் அண்ட் சில்ட்ரன் (Treatise on Parents and Children) என்ற அவரது எழுத்துப் படைப்பில் முறையான கல்வி மேல் அவருக்கு வெறுப்பு இருந்ததற்கான காரணங்களை வலியுடன் விவரித்தார்.[4] சுருக்கமாக தரநிலையாக்கப்பட்டுள்ள கல்வித் திட்டங்கள் வீண் எனக் கருதினார். அது ஆத்மாவை இறக்கடிக்கிறது என்றும் புத்திசாலித்தனத்தை மறக்கச் செய்கிறது என்றும் கருதினார். குறிப்பாக உடல் ரீதியான தண்டனைகளை அவர் வெறுத்தார் அக்காலத்தில் அது அதிகமாக இருந்தது.
அவரது தாயார் வீட்டை விட்டு வெளியேறி தனது குரலிசை ஆசிரியரான ஜார்ஜ் வேண்டீலியருடன் லண்டன் சென்ற போது பெர்னாட் ஷாவிற்கு கிட்டத்தட்ட பதினாறு வயதிருந்திருக்கும். அவரது சகோதரிகளும் தாயாருடன் சென்றனர். ஆனால் பெர்னாட் ஷா தனது தந்தையாருடன் டப்ளினில் இருந்துவிட்டார். முதலில் ஈடுபாடில்லாத மாணவராக இருந்த அவர் பின்னர் ஒரு எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். திருப்தியுடன் அந்தப் பணியைச் செய்யாவிட்டாலும் சிறப்பாக பல ஆண்டுகள் தொடர்ந்து செய்தார். 1876 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா தனது தாயாரின் லண்டன் வீட்டிற்கு சென்று சேர்ந்தார். அவரது தாயார் வேண்டீலியர் மற்றும் அவரது சகோதரி லூசி ஆகியோர் ஒரு வாரத்திற்கு ஒரு பவுண்டு பணம் என்று அவருக்கு கொடுத்தனர். அவர் அதைக் கொண்டு அங்கிருந்த பொது நூலகத்திற்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வாசகர் அறைக்கும் அடிக்கடி சென்றார். அங்குதான் அவர் தீவிரமாகப் படிக்கவும் நாவல்களை எழுதவும் தொடங்கினார். வேண்டீலியரின் இசைப் பத்தியை எழுதியதன் மூலம் தனக்கான ஊதியப் படியைப் பெற்றார். அது லண்டன் ஹார்னெட் டில் இடம்பெற்றது. அவரது நாவல்கள் நிராகரிக்கப்பட்டன, இருப்பினும் 1885 ஆம் ஆண்டு வரை இலக்கியத்திலிருந்து பெற்ற வருவாய் புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்தது. அதன் பின்னரே அவர் கலை விமர்சகராகி சுய ஆதரவுள்ள மனிதராக மாறினார்.
கம்யூனிச சித்தாந்தங்களை உள் வாங்கி மக்களின் துன்பங்களை எழுத்தில் நாடகமாக வடித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது எழுத்துக்கள் சில பத்திரிகை ஆசிரியர்களால் அவமதிக்கப்பட்டது.ஷா பெரும்பாலும் நூலகத்தில் தான் எப்போதும், ஏதேனும் படித்துக் கொண்டே இருப்பார். அப்படி ஒரு நாள் அவர் நூலகத்தில் தவம் கிடந்த போது. வில்லியம் ஆர்ச்சர் என்பவர் அறிமுகமானார். ஷா அவரிடம் பேசிய சில நிமிடங்களிலேயே , ஷா வின் படைப்புத் தன்மையையும், புத்தி கூர்மையையும் அறிந்து கொண்டார் வில்லியம் ஆர்ச்சர் .ஆர்ச்சர், தனது நாடகங்களுக்கு வசனம் எழுத ஆள் தேடிக் கொண்டு இருந்தார். ஷா விடம் இதனைப் பற்றி கேட்ட போது, ஷாவும் சம்மதித்தார். அயர்லாந்து பகுதியை சேர்ந்த ஷாவின் படைப்புகள், ஆங்கிலத்தில் நாங்கள் தான் சரியாக உச்சரிப்பு செய்கிறோம் என்ற திமிரில் இருந்த ஆங்கிலேயர்களை நய்யாண்டி செய்யும் விதத்தில் அமைந்தது.
ஷேக்ஸ்பியரை விட எனக்கு அதிக ஆங்கில வார்த்தைகள் தெரியும் என்று சொன்னார் பெர்னாட்ஷா. அது ஒரு வகையில் உண்மை தான். ஆனால் இது ஷேக்ஸ்பியரின் ரசிகர்களை கோபப் படுத்தியது. ஷாவை அழைத்து அவமானப் படுத்த வேண்டும் என்று நினைத்த அவர்கள். ஒரு விழாவுக்கு ஷாவை அழைத்தனர். ஷாவும் ஷேக்ஸ்பியரின் ரசிகர்கள் அழைத்த அந்தக் கூட்டத்திற்குப் போனார். ஷா பல வரிகளை சீரியஸ் ஆன முகத்துடன் சொல்ல யாரும் கைதட்டக் கூட இல்லை. பேசி முடியும் தருவாயில் ஷா ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான் சொன்னார், " இதுவரை நான் பேசியவை ஷேக்ஸ்பியரின் வசனங்கள் " என்று கம்பீரமாக இறங்கினார். ஷா இன்னொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார். அது யாதெனில் " என்னுடைய புத்தகங்களைப் பாடமாக வைத்துப் பிள்ளைகளைச் சாகடிக்காதீர்கள், அப்புறம் ஷேக்ஸ்பியர் போல என்னையும் அவர்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்".
இதே போல, இன்னொரு சம்பவம் ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் நகைச்சுவை உணர்வை பிரதிபலிக்கும் படி அவரது வாழ்க்கையில் அமைந்தது. அச்சம்பவம் வருமாறு
ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார்.
அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார்.
பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.
அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.
அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட... வென்று சிரித்துவிட்டார்.
பிறகு அவர், “பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா... கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!“ என்றார்.
அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, “உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்“. என்றார்.
அவரது இறுதி ஆண்டுகளில் பெர்னாட் ஷா, ஷா’ஸ் கார்னரின் மாநாடுகளுக்குச் செல்வதன் மூலம் மகிழ்ந்தார். அவர் தனது 94 ஆம் வயதில் மரம் வெட்டும் போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களினால் உருவான சிறுநீரக செயலிழப்பால் ஏற்பட்ட வீழ்ப்படிவுகளால் இறந்தார். அவரது சாம்பலும் அவரது மனைவியின் சாம்பலும் அவர்களது தோட்டத்தில் இருந்த செயிண்ட் ஜோன் சிலைக்கு அருகிலும் அதன் நடை பாதைகளைச் சுற்றிலும் தூவப்பட்டது.
