புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி

bookmark


முகமது அலி பிறப்பால் ஒரு அமெரிக்க ஆப்ரிக்கர். இவரது இயர்ப் பெயர் "காசியஸ் க்ளே". இவரது தந்தை பில்போர்டுகளுக்குப் படம் வரைந்து கொடுக்கும் ஒரு எளிய தொழிலாளி. முகமது அலி தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் போராட்டத்தை மட்டுமே ருசித்துள்ளார். ஒரு குத்துச் சண்டை வீரராக இவர் களத்தில் புகுந்தார் என்றார் வெற்றியுடன் மட்டும் தான் திரும்புவார் .

இரண்டு முறை ஹெவி வெயிட் சாம்பியனாக இருந்து உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் ஒரு முறை தங்கப் பதக்கம் பெற்று வந்தார். ஆனால், இனவெறி காரணமாக இவரை அன்புடன் வரவேற்க்கக் கூட விமான நிலையத்தில் அப்போது ஆளில்லை . விமான நிலையத்தில் உணவு விடுதியில் இருந்த வெயிட்டர் கூட இவரை மதிக்கவில்லை. கடுப்போடு தான் கஷ்டப்பட்டுப் பெற்ற அந்தப் பதக்கத்தை நதியில் வீசி விட்டு நடந்தார்.

இவர் காலகட்டத்தில் வியட்நாம் போர் கடுமையாக நடந்து வந்தது. அப்போரில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க அரசு கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்தது. அதில் இவரையும் சேரச் சொல்லி அழைப்பு விடுத்தது. ஆனால், முகமது அலி " அப்பாவி மக்களைக் கொல்லும் போரில் தான் கலந்து கொள்ள மாட்டேன் " என்று அமெரிக்காவின் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதற்குப் பலி வாங்க சமயம் பார்த்து காத்து இருந்த அமெரிக்க அரசு நேரம் பார்த்து குத்துச் சண்டையில் கலந்து கொள்வதற்கான அவரது லைசன்சை நீக்கியது.

இதன் காரணமாக எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் மூன்று வருடம் வனவாசத்தை அனுபவித்தார். அதன் பின் சில காலம் கழித்து மீண்டும் குத்துச் சண்டை களத்ததுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து தோல்விகள் தான் பரிசாகக் கிடைத்தது. இனி முகம்மது அலி அவ்வளவு தான் என்று எல்லோரும் நினைத்தனர். சிலர் நகைத்தனர். ஆனால், உலக சாம்பியன் ஷிப் போட்டி வந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை, அப்படி ஒரு வெற்றியை பெற்றார் முகம்மது அலி.

அவர் குத்துச் சண்டையின் போது வாங்கிய அடிகளால் பார்கின்சன் சிண்றோம் என்ற ஒரு வித முடக்கு நோயால் பாதிக்கப் பட்டார் . அந்நிலையிலும் ஏழை எளியோருக்கு உதவிகள் பல செய்தார். முகமது அலியின் வாழ்க்கை தோல்வியால் துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கையைத் தரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.