பித்தளை பாத்திரம்
"என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?"
"ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"
"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."
"நிஜமாவா?"
"ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."
"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.."
"யார் வயிற்றின் மீது டாக்டர்..?"
"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"
"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."
"என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?"
"சல்லடை..!"
