நெடுங்களம்

பாடல் 892
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன ...... தந்ததான
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப்
பண்டறவுடன்பழைய தொண்டர்களு டன்பழகி
பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக்
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங்
கொஞ்சமயி லினற்புறமெல் வந்தருளி யென்கவலை
கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய்
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல்
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம்
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.