நகர் நீங்கு படலம் - 1819

1819.
‘வலக் கார் முகம் என் கையது ஆக,
அவ் வானுளோரும்
விலக்கார்; வேர் வந்து விலக்கினும்,
என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து, உலகு எழினோடு
ஏழும், மன்னர்
குலக் காவலும், இன்று, உனக்கு யான் தரக்
கோடி’ என்றான்.
‘வலக் கார்முகம் - வலிமை படைத்த வில்; என் கையது ஆக -
என்கையின்கண் இருப்பதாக; அவ்வானுளோரும் - அந்தத் தேவர்களும்;
விலக்கார் -என்னைத் துணிந்து தடுக்கமாட்டார்; அவர் வந்து
விலக்கினும் - (ஒருவேளை) அவர் வந்து தடுத்தாலும்; என் கை வாளிக்கு-
என் கையில் உள்ள அம்புக்கு; இலக்கா -குறியாகும்படி; எரிவித்து -
(அவர்களை) எரியச் செய்து; உனக்கு -; உலகு ஏழினோடுஏழும் -
பதினான்கு உலகங்களும்; மன்னர் குலக் காவலும் - அரசர் குலத்துக்
காவல்தொழிலாகிய சக்கரவர்த்தியாம் தன்மையும்; இன்று - இப்பொழுதே;
யான் தர- நான் கொடுக்க; கோடி’ - கொள்வாய்;’ என்றான்-
கார்முகம் - வில். தசரதன் மன்னர் மன்னன் ஆதலின் ‘மன்னர்
குலக் காவலும்’இராமனுக் குரியதாக்குவேன் என்றான் இலக்குவன். 124