நகர் நீங்கு படலம் - 1786

1786.
‘வேந்தன் பணியினால்,
கைகேசி மெய்ப் புதல்வன்,
பாந்தள்மிசைக் கிடந்த
பார் அளிப்பான் ஆயினான்;
ஏந்து தடந் தோள்
இராமன், திரு மடந்தை
காந்தன், ஒரு முறை போய்க்
காடு உறைவான் ஆயினான்.’
‘வேந்தன் பணியினால் - சக்கரவர்த்தியின் கட்டளையால்; கைகேசி
மெய்ப்புதல்வன் - கைகேயியின் சத்திய மைந்தனாகிய பரதன்;
பாந்தள்மிசைக் கிடந்தபார் - ஆதிசேடன் தலைமேல் தங்கிய
இப்பூமியை; அளிப்பான் ஆயினான் - காப்பாற்றும் அரசுரிமையை
எய்தியவன் ஆனான்; ஏந்து தடந்தோள் இராமன் திருமடந்தை
காந்தன் - உயர்ந்த அகன்ற தோள்களை உடைய இராமனாகிய திருமகள்
கணவன்; ஒருமுறைகாடுபோய் உறைவான் ஆயினான் - ஒருமுறையாகக்
காடு சென்று தங்குவான் ஆனான், (என்றான்முனிவன்.)
மேல்பாட்டின் மூலமாகவே மன்னர்களுக்கு இராமன் காடு செல்வதும்,
பரதன் நாடாள்வதும்அறிய வந்துவிடுகிறது. ஆயினும், முனிவன்
அவைக்குக் கருத்து அறிவிக்க வேண்டியது முறை ஆதலின்முடிவு காட்டி
இதனைக் கூறினானர்க்கே கூறியதாக்குக. ஒருமுறை எனக்கு தயரதன் தந்த
வரத்தின்படி இராமன் காடு செல்வதும் ஒருவகையில் முறையானதே
என்பதைச் சுட்டிற்று. (முறை -நீதி) 91