நகர் நீங்கு படலம் - 1720

bookmark

கோசலை சிந்தனை

கோசலை மகனைக் கான் ஏகாது  தடுக்கத் தயரதனிடம் சேறல்  

1720.    

இத் திறத்த எனைப் பல வாசம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா,
‘எத் திறத்தும் இறக்கும் இந் நாடு’ எனா,
மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள்.

     மெய்த் திறத்து விளங்கிழை - சத்தியமாகிய அணிகலனை அணிந்த
கோசலை; இத்திறத்து  எனைப் பல வாசகம் உய்த்து  உரைத்த மகன்
உரை - மேற் கூறியவாறு  பலவார்த்தைகளைக் கொண்டு வந்து சொல்லித்
தேற்றிய இராமனது சொற்களை;  உட்கொளா -மனத்தில் கொண்டு; ‘எத்
திறத்தும் இந்நாடு இறக்கும்’ எனா - எப்படியும் இவன்இந்நாட்டைக்
கடந்து காடு செல்வான் என்று;  உன்னுவாள் - மனத்தில் கருதுபவளாகி,

     தடுக்கத் தயரதன்பால் சென்றாள் என்று அடுத்த செய்யுளில் முடியும்.
உன்னுவாள் -முற்றெச்சம்.  காடு செல்லாமல் தயரதன் மூலம் ஆணையை
மாற்றலாம் என்பது  கோசலைகருத்து.                            26