நகர வருக்கம்
நன்மை கடைப்பிடி
- நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
நாடு ஒப்பன செய்
- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்
நிலையில் பிரியேல்
- உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
நீர் விளையாடேல்
- வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே
நுண்மை நுகரேல்
- நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
நூல் பல கல்
- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
நெற்பயிர் விளை
- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
நேர்பட ஒழுகு
- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
நைவினை நணுகேல்
- பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
நொய்ய உரையேல்
- பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
நோய்க்கு இடங் கொடேல்
- மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
