தொடக்கக்கால வாழ்க்கை

தொடக்கக்கால வாழ்க்கை

bookmark

ஸ்டீவ் ஜொப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழ மாணவர்களுக்குப் பிறந்தார். இவரின் பெற்றோர் சோஆன் சீப்லெ (Joanne Schieble), சிரியா நாட்டினரான அப்துல்ஃவட்டா சண்டாலி ஆகியோர். ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளக் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர்[1]. ஜொப்ஸ் தத்து எடுத்த சில மாதங்களிலேயே, அவருடைய பிறப்புப் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர்; அவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள்.

1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தது.