தொடக்ககால வாழ்க்கை

தொடக்ககால வாழ்க்கை

bookmark


திருபாய் அம்பானி குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும் ஜமுனாபென்[1] னுக்கும் மகனாய்ப் பிறந்தார். ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் உயர்த்தப்பட்டார்.

அவருக்கும் கோகிலா பென்னுக்கும் திருமணம் நடந்தது. முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோதாரி மற்றும் ரினா சல்கோன்கர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.