தூக்கத்தைக் கெடுக்கும் சிந்தனை

bookmark

மர வியாபாரி ஒருவர் தன் நண்பரிடம், இரவில் எனக்குத் தூக்கமே வர மாட்டேங்குது, என்று குறைபட்டுக் கொண்டிருந்தார். 

ஏன் நீங்க நான் சொன்னது போல ஒன்று இரண்டு என்று தூக்கம் வரும்வரை எண்ணத் கூடாது, மர வியாபாரத்தில் இருக்கீங்க அதைப் பற்றி எண்ணினால் தூக்கம் தானே வருகிறது, என்றார் நண்பர்.

அதனால்தான் வந்த தூக்கமும் கெட்டுடுச்சி.

எப்படி?

நேற்று நான் படுத்துக் கொண்டே ஏராளமான மரங்களை எண்ணினேன். பிறகு அவற்றை வெட்டி அறுத்துத் துண்டு போட்டுப் பலகையாக்கி விற்றேன். கணக்குப் பார்த்ததில் எனக்கு ஆயிரம் ரூபாய் இழப்பு, அதன் பிறகு தூக்கமே வரவில்லை.