தீபாவளி ஸ்பெஷல்: கூட்டணி வெடி

bookmark

"பத்த வைக்கும் போதே வெடிக்கற மாதிரி பட்டாசு இருக்கா?"

"அவ்வளவு ஆபத்தான வெடி எதுக்கு?"

"தலை தீபாவளிக்கு வந்து நாலு வருஷமாகியும் ஊருக்குக் கிளம்பாத மாப்பிள்ளையை விரட்டத்தான்.!"

"தலைவரே, தீபாவளியை நீங்க புறக்கணிக்க என்ன காரணம்?"

"அசின், த்ரிஷா இல்லாத தமிழ் நாட்டுல, தீபாவளியை கொண்டாட எனக்கு மனசு வரலைய்யா...!"

"வர்ணனை கொடுக்கறதுல தலைவரை மிஞ்ச ஆளே கிடையாதா... எப்படி?"

"கம்பி மத்தாப்போட சிதறல், அனுஷ்காவோட புன்சிரிப்பு மாதிரி இருக்குன்னு சொல்றாரே..!"

"என்னங்க... தீபாவளிக்கு நான் புக்கை பார்த்து மைசூர்பாகு பண்ணி இருக்கேன்!"

"அந்த புக்ல மைசூர் பாகை எப்படி உடைக்கறதுன்னு போட்டிருக்கா..?"

"இந்த பட்டாசுல நிறைய திரிகள் இருக்குதே... ஏன்?"

"இது கூட்டணி வெடிங்க..!"