திருவள்ளுவரும் சைவமும்
திருவள்ளுவரும் சைவமும்
திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[3] இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[4] திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் தேர்வுத்துறை முன்னோடியான சோ. சண்முகம் அவர்கள் திருக்குறளில் சைவ சமயம் எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பியுள்ளன என்கிறார்.
