சொந்த வாழ்க்கை
கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.
கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார்.
