சுந்தர காண்டம்

bookmark

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம் என்னும் இப்பகுதி பதினாறு படலங்களைக் கொண்டது. கடல் தாவு படலத்தில் இருந்து சுந்தர காண்டம் ஆரம்பமாகிறது.

அனுமான் இராம நாமத்தை ஜபித்த படி கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்கிறான். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை ஜெயித்து இலங்கையை அடைகிறான். அச்சமயம் இலங்கையின் அழகைக் கண்டு வியக்கிறான்.

பின்னர் இலங்கையின் உள்ளே செல்லும் அனுமானை இலங்கை மாதேவி தடுக்கிறாள். அப்போது அவளுடம் போரிட்டு முக்தி அளிக்கிறார் அனுமான்.

பின்னர் சீதையைத் தேடி இலங்கை முழுதும் அலைகிறார் அனுமான். அப்போது இராவணன் மற்றும் அவனது சகோதரர்கள் தங்கள், தங்கள் மாளிகைகளில் உறங்கிக் கொண்டு இருப்பதைக் காண்கிறார். இராவணன் உறங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு சீற்றம் கொண்டு. அவனை அந்த இடத்திலேயே வதைத்து விடலாமா என்று சிந்தித்து பின்னர் அது தவறு என்று உணர்ந்து, தான் தூதனாக வந்த காரியத்தை செய்யத் தொடங்கிகிறார்.

எங்கெல்லாமோ சீதையைத் தேடியும் கிடைக்காமல் புலம்பி இறுதியில் அசோக வனத்தை அடைகிறார் அனுமான். அங்கு சீதாதேவியின் அவல நிலையைக் காண்கிறார் அனுமான். அது கண்டு வருந்துகிறார்.

பின்னர் இராவணன் அரக்கியர் சூழ சீதையிடம் வந்து காதல் வசனம் பேச, சீதையோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் துரத்தி அனுப்புகிறாள். கோபத்துடன் இராவணன் சீதையை வசப்படுத்துமாறு அவளைப் பாதுகாக்கும் அரக்கியரிடம் கூறிச் செல்கிறான்.

பிறகு அனுமன் சீதையைக் காண்கிறான், முதலில் அனுமனைக் கண்ட சீதை சந்தேகம் கொண்டாலும். அனுமனின் செயல்காளால் அவனை இராமபிரான் தான் அனுப்பியதாக உணர்கிறாள். பின்னர் அனுமனிடம் இருந்து அடையாளமாக இராமபிரான் கொடுத்து அனுப்பிய மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்கிறாள். பின்னர் தான் புடவையில் முடிந்து வைத்து இருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுக்கிறாள்.

அனுமன் சீதையை பாதுகாப்புடன் இராமனிடம் சேர்ப்பதாகக் கூற. சீதை அது பொருத்ததமற்ற செயல் எனக் கூறி மறுக்கிறாள்.

பின்னர் சீதையிடம் இருந்து விடை பெற்ற அனுமான் அசோக வனத்தையே அழிக்கிறார். அங்குள்ள சுவையான பழங்களை சந்தோஷமாக களைப்பு தீர உண்டு மகிழ்கிறார். அந்தச் செயலை தடுக்க வந்த அரக்கர்களை உதைக்க அந்த அரக்கர்கள் அடி தாங்காமல் ஓடுகிறார்கள்.

இராவணனிடம் ஓடி வந்து அரக்கர்கள் அனுமன் செய்யும் அட்டகாசத்தைக் கூறுகின்றனர். அவன் கிங்கரர் என்ற அரக்க வீரர்களை அனுப்ப, அவர்களை அனுமன் துவம்சம் செய்து கொல்கிறார்.

பிறகு இராவணன் ஏவிய சம்புமாலி என்னும் அரக்கனும் அனுமனால் கொல்லப்படுகிறான்.

பின்னர் இராவணன் தனது வலிமையான ஐந்து படைத் தளபதிகளை அனுப்ப அவர்களும் அனுமன் கைகளால் உதைபட்டு உயிரை விடுகின்றார்கள்.

இப்போது இராவணன் தனது மகன் அக்ஷய குமாரனை அனுப்ப, அவனையும் அனுமன் கொல்கிறான்.

பிறகு மகன் அக்ஷய குமாரன் இறந்தது கண்டு இராவணன் துடித்துப் போக அவனது இன்னொரு மகன் இந்திரஜித் அனுமனை பிடிக்க செல்கிறான். அப்போது இந்திரஜித் அனுமனை பிரம்மாஸ்த்திரம் கொண்டு கட்டுகிறான். பிறகு அனுமன் சில நாழிகைப் பொழுது கழிந்த பிறகு, தானே அந்த பிரம்மாஸ்த்திரத்தில் இருந்து விடுபட்டுக் கொள்கிறான்.

அப்போது சபையில் அனுமன் நிறுத்தப்பட்டு அவனது வாலில் தீயை வைக்கிறார்கள் அசுரர்கள். அந்தத் தீயைக் கொண்டே இலங்கையை எரிக்கிறார் அனுமான்.

பிறகு அனுமன் மீண்டும் இராமனின் இருப்பிடம் சென்று அவரது பாதம் தொட்டு வணங்கி "கண்டேன் சீதையை" எனக் கூறி, அதற்கு அடையாளாமாக சீதையின் சூடாமணியை இராமனிடம் அளிக்கிறார்.

இதுவே சுந்தர காண்டத்தின் சுருக்கம் ஆகும்