சீத்தாப்பழம்
சீத்தாப்பழம் நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.
இது ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் சரி செய்யும்.
தொற்றுநோய், பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும் திறன் சீத்தாப்பழத்திற்கு உண்டு.
சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் தலைக்கும், மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, நினைவாற்றல் அதிகரிக்கும்.
எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலுகொடுக்கும் தன்மை சீத்தாப்பழத்திற்கு உண்டு.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது சீத்தா. மேலும் உடல் எடை அதிகரிக்க சீத்தாப்பழத்தை சாப்பிடலாம்.
