சர் ஹம்பிரி டேவி

bookmark

சர் ஹம்பிரி டேவி இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார். டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார். 1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான காப்பு விளக்கு உதவியது.

சர் ஹம்பிரி டேவி இங்கிலாந்தில் உள்ள பென்சான்ஸ் நகரில் 1778 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி பிறந்தார்.சிறு வயதிலேயே அவருக்கு நல்ல சிந்தனைகள் இருந்தது.சர் ஹம்பிரி டேவியின் பதினாறாவது வயதில் , அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை உயிர் இழந்தார். டேவி, தந்தை இறந்தாலும் அவரது கனவுகள் இன்னும் இறக்கவில்லை என்பதை புரிந்து கொண்டார்.அவரது தந்தை காட்டிய வழியில் செல்லத் தொடங்கினார். தந்தை போன உடன் டேவி ஏழ்மை என்னும் கசப்பான நிலையை ருசிக்க ஆரம்பித்தார். " பீகாம் போர்லஸ்" என்ற மருந்து விற்பனையாளரிடம் வேலைக்கு சேர்ந்தார்.அவருக்கு அங்கு மருந்துகளை கலக்கிக் கொடுக்கும் வேலை தரப்பட்டது. வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தை இரசாயனம் சம்மந்தமான புத்தகங்களைப் படிப்பதில் ஈடுபடுத்திக் கொண்டார்.அவர் படித்துப் புரிந்ததை எல்லாம் ஒரு ஆய்வுக் கட்டுரையாக எழுதினார்.அதனை பிரிஸ்டல் நகரில் வசித்து வந்த புகழ் பெற்ற அறிஞரான பேராசிரியர் பெட்டோஸ் அவர்களுக்கு அனுப்பினார்.

டேவி வாழ்ந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது ஏற்படும் வலி தெரியாமல் இருக்க எந்த மருந்தும் கண்டு பிடிக்கப் படவில்லை.மேலும் நோயாளி வழியில் துடி துடித்தாலும் அறுவை சிகிச்சை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்த அவல நிலை இருந்தது . இதற்கு ஒரு மாற்று வழியை கண்டு பிடிக்க வேண்டும் என்று முனைப்புடம் செயல் பட ஆரம்பித்தார் டேவி . நோயாளிகளை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்தால் வலி தெரியாது என்பதை உணர்ந்து, குலோரோபார்ம் என்ற மயக்கத்திற்க்குப் பயன்படும் திரவ மருந்தைக் கண்டு பிடித்தார். மேலும், தனது சோதனைகளை தொடர்ந்து நடத்தி நைட்ரஸ் ஆக்சைடு என்ற சிரிப்பூட்டும் வாயுவையும் கண்டு பிடித்தார்.

இது போன்ற கண்டு பிடிப்புகளால் பிரபலம் அடைந்த டேவி, அறிவியல் அறிஞர் ரம்போர்டு இராயல் அறிவியல் கழகத்தில் விஞ்ஞானியாக அழைக்கப் பட்டார். அங்கு சென்று பணியில் அமர்ந்த டேவி மின்சாரத்திற்கும், இரசாயனத்திற்க்கும் உள்ள தொடர்பை விளக்க ஆய்வுகள் மேற்கொண்டார்.தண்ணீருக்குள் மின்சாரத்தை செலுத்தி நீரானது ஹைட்ரஜன் , ஆக்சிஜன் என்ற இரண்டாகப் பிரிவதைக் கண்டார். அதன் மூலம் நீர் தனிப்பொருள் அல்ல என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பாராட்டை பெற்றார்.பிறகு மக்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்ற டேவி, 1802 ஆம் ஆண்டு முதல் சொற்பொழிவுகளை மேற்கொண்டார், அதன் மூலம் மக்களுக்கு அறிவியலில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஊர் முழுக்க சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார் டேவி. அதன் பயனாக சுரங்கத் தொழிலாளர்கள் இருள் நிறைந்த சுரங்கத்துக்குள் செல்லும் போது ஒளி இல்லாமல் படும் அவஸ்த்தைகளை தெரிந்து கொண்டார். சாதாரண விளக்குகளை சுரங்கத்துக்குள் எடுத்துச் சென்றால் தீப்பிடிக்கும் அல்லது அணைந்து விடும். இதற்கு ஒரு விடிவு காண முயற்சி செய்தார்.அதன் விளைவாக காப்பு விளக்கை அறிமுகப் படுத்தினார். இது தான் பிற்காலத்தில் சேப்டி லாம்ப் என அறியப்பட்டது. இத்தகைய கண்டு பிடிப்புகள் மூலம் இங்கிலாந்து அரசு டேவை அறிவியல் நிலையத் தலைவராக மாற்றியது. பணம், பெருமை , புகழ் என அனைத்தும் டேவை தேடி வந்தது.விலை மதிக்க முடியாத வைரம் கூட ஒரு காலத்தில் கரித் துண்டு தான் என பிரான்சில் ஒரு கூட்டத்திற்கு சென்ற போது நிரூபித்தார்.உலகம் அவரது அறிவுத் திறனைக் கண்டு வியந்தது. 1812 ஆம் ஆண்டு விதவை ஒருவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தினார் டேவி.

குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றையும் கண்டு பிடித்தார். இவ்வாறு ,பல கண்டு பிடிப்புகளை மேற்கொண்டு தனக்கு பிறகு வர விருந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக வாழ்ந்த டேவி 1829 ஆம் ஆண்டு, மே மாதம் 20 ஆம் தேதி காலமானார்.