கொஸ்ட்டீன் பேப்பர்

bookmark

"இந்தியா, பாகிஸ்தான் ரெண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு... சொல்லுங்க பார்ப்போம்."

"தெரியலையா?, கமா(,) தான்."

"படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?"

"புக்கை மூடிடுவேன்!"

"ரொம்ப நாள் உயிர் வாழ என்ன வழி?"

"சாகாம இருக்கணும்."

"ஏன் பொண்ணை மாப்பிள்ளை அப்படி முறைச்சி பார்க்கறாரு?"

"அவர் முறை மாப்பிள்ளையாம்."

"ஹெட்மாஸ்டர் ஏன் பிளம்பர வரச் சொல்லுறாரு?"

"கொஸ்ட்டீன் பேப்பர் லீக் ஆயிருச்சாம்!"