கொத்தவரக்காய்

கொத்தவரக்காய்

bookmark

கொத்தவரக்காய்

கொத்தவரக்காய் ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்று.

இதன் காய்கள், செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கும் இயல்பை உடையது.

கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம் கண்டு பயன்படுத்தியது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான். குறிப்பாக இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சமையலுக்காக பயன்படுத்துவதைக் காட்டிலும் கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார் பிசின் உணவுத்தயாரிப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் பயன்படுகிறது.

அதனாலயே இன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பணப்பயிர்களில் முக்கியமானதாக கொத்தவரக்காய் உள்ளது.