கருவூர்

bookmark

பாடல் 923
ராகம் - பூர்விகல்யாணி 
தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதானத் தனதான தனதானத் ...... தனதான 


மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் 

பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே 

நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் 

கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே. 
பாடல் 924 
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன 
தனனத் தனத்ததன ...... தனதான 


இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி 
யிரதக் குடத்தையெணு ...... மரபோடே 

இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய 
இதழ்சர்க்க ரைப்பழமொ ...... டுற்ழுறல் 

முளரிப்பு வொத்தமுக முகம்வைத் தருத்திநல 
முதிரத்து வற்பஅல்குல் ...... மி¨ச்முழ்கி 

மொழிதத்தை யொப்பகடை விழிகட் சிவப்பமளி 
முழுகிச்சு கிக்கும்வினை ...... யறஆளாய் 

நளினப் பதக்கழலு மொளிர்செச்சை பொற்புயமெ 
னயனத்தி லுற்றுநட ...... மிடும்வேலா 

நரனுக் கமைத்தகொடி யிரதச்சு தக்களவ 
னறைபுட்ப நற்றுளவன் ...... மருகோனே 

களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக 
கமலப் புயத்துவளி ...... மணவாளா 

கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர் 
கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே. 
பாடல் 925 
ராகம் - கீரவாணி 
தாளம் - ஆதி 

தனனா தனனத் தனனா தனனத் 
தனனா தனனத் ...... தனதான 


தசையா கியற் றையினால் முடியத் 
தலைகா லளவொப் ...... பனையாயே 

தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் 
றவிரா வுடலத் ...... தினைநாயேன் 

பசுபா சமும்விட் டறிவா லறியப் 
படுபூ ரணநிட் ...... களமான 

பதிபா வனையுற் றநுபூ தியிலப் 
படியே யடைவித் ...... தருள்வாயே 

அசலே சுரர்புத் திரனே குணதிக் 
கருணோ தயமுத் ...... தமிழோனே 

அகிலா கமவித் தகனை துகளற் 
றவர்வாழ் வயலித் ...... திருநாடா 

கசிவா ரிதயத் தமிர்தே மதுபக் 
கமலா லயன்மைத் ...... துனவேளே 

கருணா கரசற் குருவே குடகிற் 
கருவூ ரழகப் ...... பெருமாளே. 
பாடல் 926 
தத்தத் தனதன தானன தானன 
தத்தத் தனதன தானன தானன 
தத்தத் தனதன தானன தானன ...... தனதான 


நித்தப் பிணிகொடு மேவிய காயமி 
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு 
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி 

நிற்கப் படுமுல காளவு மாகரி 
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு 
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை 

எத்தித் திரியுமி தேதுபொ யாதென 
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ 
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை 

எத்திற் கொடுநின தாரடி யாரொடு 
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு 
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய் 

தத்தத் தனதன தானன தானன 
தித்தித் திமிதிமி தீதக தோதக 
டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச் 

சத்தத் தொலிதிகை தாவிட வானவர் 
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட 
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே 

வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல 
சத்திக் கிடமருள் தாதகி வேணியர் 
வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 

வெற்புத் தடமலை யாள்வளி நாயகி 
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள 
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 927 

தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன 
தத்தன தத்த தனதனத் ...... தனதான 


முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென 
மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர் 

முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட 
மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம் 

கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய 
கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங் 

கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித 
கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ 

வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக 
விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா 

வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ் 
வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா 

கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு 
கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா 

கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி 
கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே. 
பாடல் 928
தந்தன தனன தனதாத்தன 
தந்தன தனன தனதாத்தன 
தந்தன தனன தனதாத்தன ...... தனதான 


சஞ்சல சரித பரநாட்டர்கள் 
மந்திரி குமரர் படையாட்சிகள் 
சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித் 

தண்டிகை களிறு பரிமேற்றனி 
வெண்குடை நிழலி லுலவாக்கன 
சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க் 

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு 
பஞ்சணை மிசையி லிசையாத்திரள் 
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங் 

கொங்கணி மகளிர் பெருநாட்டிய 
நன்றென மனது மகிழ்பார்த்திபர் 
கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே 

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர் 
வென்றிட சகுனி கவறாற்பொருள் 
பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப் 

பண்டையில் விதியை நினையாப்பனி 
ரண்டுடை வருக்ஷ முறையாப்பல 
பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே 

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில் 
முந்துத முடைய மனைவாழ்க்கையின் 
வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள் 

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி 
யுந்தினன் மருக வயலூர்க்குக
வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே. 
பாடல் 929 
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன 
தனதன தந்தன தாத்தன ...... தனதான 


முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ 
முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக 

முளைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட 
முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத் 

துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி 
துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின் 

துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில் 
சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே 

சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள் 
சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச் 

சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு 
சமர முகந்தனில் நாட்டிய ...... மயிலேறி 

அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத 
அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ 

அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட 
அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.