கடிமணப் படலம் - 1272

bookmark

1272.    

பண்டியில் நிறை வாசப் பனி மலர் கொணர்வாரும்.
தண்டலை இலையோடு. கனி பல தருவாரும்.
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்.
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும்.*
 
பண்டியில் நிறைவாசப் பனிமலர் கொணர்வாரும் - வண்டிகளிலே
நிறைந்த வாசமுடைய குளிர்ந்த மலர்களைக்  கொண்டு   வருபவர்களும்;
தண்டலை  இலையோடு  கனிபல தருவாரும் - சோலைகளிலேயுள்ள
(வாழை  முதலிய) இலைகளையும்  (பல்வகைக்)  கனிகளையும்  கொண்டு
வருபவர்களும்; குண்டலம்  வெயில்வீசக் குரவைகள்   புரிவாரும் -
தங்கள்  குண்டலம்   என்னும்  காதணிகள் (அசைவதனால்)  ஒளி வீசப்
(பலர்   கை    கோத்து   ஆடும்)    (குரவைக்  கூத்து)  ஆடுபவரும்;
உண்டைகொள்  மதவேழத்து  ஓடைகள்  அணிவாரும்  -  கவளம்
கவளமாக  உண்ணும்  வழக்கமுடைய  மதயானைகளின்  நெற்றியில் முக
படாங்களை அணிகின்றவர்களும் (ஆயினர்).  

வெயிற்கடுமை    நீங்க. பொது இடங்களில் பரப்பவும் பந்தர் இடவும்
இலைகளையும்.   மலர்களையும்.    விருந்தோம்புதற்குக்   கனிகளையும்
வண்டி வண்டியாகக் கொண்டுவந்தனர் என்பதாம்.                 28