கடிமணப் படலம் - 1269

1269.
தளம் கிளர் மணி கால.
தவழ் சுடர் உமிழ் தீபம்.
இளங் குளிர் முளை ஆர் நல்
பாலிகை இனம். எங்கும்.
விளிம்பு பொன் விரை நாற.
வெயிலொடு நிலவு ஈனும்.
பளிங்குடை உயர் திண்ணைப்
பத்தியின் வைப்பாரும்.
விளிம்பு பொன் விரை நாற- ஓரங்கள் எல்லாம் பொன் பதிக்கப்
பெற்றுள்ள பொன் தகடுகள் மணம் கமழ; வெயிலொடு நிலவு ஈனும் -
ஞாயிற்றின் வெப்பமும். நிலவின் தண்மையும் ஒருங்கே உமிழும்
(சூரிய. சந்திர காந்தக் கற்கள் என்னும்); பளிங்குடை உயர்
திண்ணைப் பத்தியின் - படிகக் கற்கள் பதிக்கப்பெற்ற உயர்ந்த
திண்ணைகளின் வரிசைகளில்; தளம் கிளர் மணி கால -
அடித்தளத்தில் பதிக்கப் பெற்றுள்ள மாணிக்கங்கள் ஒளிசிந்தவும்;
தவழ் சுடர் உமிழ்தீபம் - பரவுகின்ற ஒளி உமிழ்கின்ற தீபங்களையும்;
குளிர் இளமுளை ஆர் நல் பாலிகை இனம் - குளிர்ந்த இளமையான
விதைமுளைகள் பொருந்தின நல்ல பாலிகைக் கிண்ணங்களின்
வகைகளையும்; எங்கும் வைப்பாரும் - (அந்நகரத்தில்)
எவ்விடத்திலும் வைப்பாரும் (ஆயினர்).
சூரிய ஒளியில் வெயிலும். சந்திர ஒளியில் தண்ணீரும் உமிழ்வது
சூரிய காந்தக் கல். சந்திரக்கல் எனும் இரண்டின் இயல்பாதலின்.
அவை இரண்டும் பதிக்கப்பெற்ற திண்ணைகளில் “வெயிலொடு
நிலவு ஈனும்” எனப்பட்டன. சுடர் என்பது மணித் தீபத்தையும்.
உமிழ் தீபம் என்பது. தீச்சுடர் விளக்குகளையும்குறித்தன. 25