ஓவர் ஸ்பீட்
"பெற்றோருக்கு பயந்து காதலை விட்ட காலம்போய்... இப்போது
பெட்ரோலுக்கு பயந்து காதலை விடுகிறார்கள் இளைஞர்கள்...!!"
"சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?"
"வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க...."
"கபாலி உன்னை போலீஸ் தேடுது"
"நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே"
"அதான், ஏன் பண்ணலேன்னு கேட்க தேடுது"
"அன்பே, என்னை மட்டும் பிடிக்கலேனு சொல்லிடாதே... ப்ளீஸ்."
"சரி, உன் குடும்பமே பிடிக்கல"
"சார், இவன் கார்ல ஓவர் ஸ்பீட் போனான்.."
நீங்க, எப்பிடி மடக்கினீங்க?"
"சைக்கிள்ல போய்"
