ஐந்து கேள்விப்பா

bookmark

"கையில் பணமே தங்க மாட்டேங்குது..."

"நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"

"நம்ம எம்.எல்.ஏ. எதுக்கு வெயிட்டைக் கூட்டறார்...?"

"சட்டசபையில பிரச்சினை பண்றப்ப யாரும் அவரை குண்டுக்கட்டா தூக்கக் கூடாதாம்...!"

"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?"

"ஐந்து கேள்விப்பா"

"நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?"

"முதல் மூணும் கடைசி இரண்டும்"

"வெரிகுட் கீபிடப்"

"என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போறீங்க?"

"டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்."

"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்."

"அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."