எழுச்சிப் படலம் - 852
ஒட்டகங்களின் செயல்
ஒட்டகம் சென்ற பான்மை
852.
தள்ள அரும் பரம் தாங்கிய ஒட்டகம்.
தெள்ளு தேம் குழை யாவையும் தின்கில;
உள்ளம் என்னத் தம் வாயும் உலர்ந்தன.
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே.
தள்ள அரு- இறக்கி வைக்கமுடியாத; பதம் - பெரிய சுமையை;
தாங்கிய ஒட்டகம் - சுமந்து சென்ற ஒட்டகம்; தெள்ளு தேம் குழை-
தெளிந்த இனிய தளிர்கள்; யாவையும் - எவற்றையும்; தின்கில-
தின்னாமல்; கைப்பன தேடி - கசக்கும் வேப்பந்தழை முதலியவற்றைத்
தேடி; கள் உண் மாந்தரில் - கள்ளைக் குடிக்கும் மக்களைப் போல;
உள்ளம் என்ன - (தம்) நெஞ்சு உலர்ந்தது போல; தம் வாயும்
உலர்ந்தன - வாயும் உலர்ந்தன.
கட் குடியர் பால் முதலிய இனிய சுவையான பொருள்கள் பல
இருப்பினும் அவற்றை விரும்பாது கள்ளைத் தேடி அலைவது போல.
இன்சுவைத் தளிர் பல இருப்பினும் அவற்றை விரும்பாது ஒட்டகம்
வேப்பந்தழையையே நாடி அலைந்தது;வாயும் நெஞ்சும் உலர்ந்தது. 36
