எட்மண்ட் ஹில்லரி

bookmark

சர் எட்மண்ட் ஹில்லரி நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர்; கொடையாளர் மற்றும் விமானியுமாவார். இரண்டாம் உலகப் போரில் வான்படையில் விமான ஓட்டியாகப் பங்கு கொண்டவர். 1951 , 1952 களில் இவரின் சோ ஒயு என்ற மலை ஏறும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1958 இல் ஹிலாரி முதன் முதலில் உலகின் தென் முனையை அடைந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் உலகின் இரு முனைகளையும் (வடமுனை, தென்முனை) அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். அதன் பின்னர் மே 29 1953 ஆம் நாள் தனது 33 ஆம் அகவையில் நேபாள நாட்டின்ஷெர்ப்பாஇனத்தைச் சேர்ந்த மலையேறுநர் டென்சிங் நோர்கே வுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பவர் தலைமையில் பிரித்தானியரின் ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும்.

இவரைப் பற்றி சொல்ல வேண்டும் எனில் இவர் தான் முதன் முதலில் எவரஸ்ட் சிகரத்தை அடைந்தவர் . இவர் சிறு வயதில், தனது பள்ளிப் பருவத்தில் சுமாராகப் படிக்கக் கூடிய மாணவராகத் தான் திகழ்ந்தார். ஆனால், நிறைய சாகசக் கதைகளைப் படிப்பார்.அதன் காரணமாக ஒரு வித சாகச உலகில் மிதப்பார். அந்த கதைகளில் வரும் நாயகர்களைப் போலத் தானும் மாற வேண்டும் என்று குத்துச் சண்டைகளை எல்லாம் கற்றுக் கொண்டார். அத்தருணத்தில் தான் இவருக்கு மலை ஏற வேண்டும் என்ற ஆசையும் கிளம்பியது.

வான்படையில் பணியாற்றிய போது வார இறுதியில் அருகிலிருந்த மவுண்ட் எக்மென்ட் என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.

ஹாரி ஏயர்ஸ், மிக் சல்லிவன் ஆகியோர் தலைமையில் ஹில்லாரி, ரூத் ஆடம்ஸ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று நியூசிலாந்தின் எல்லியிலுள்ள மவுண்ட் குக் மலையின் மிக உயர்ந்த சிகரமாகிய அவுராக்கி உச்சியை 1948 ஜனவரி 30 அன்று அடைந்தது.1953 இல் மிகப் பெரிய உலக சாதனையை செய்வதற்கு முன்னர் ஹில்லாரி 1951 இல் எரிக் ஷிப்டான் என்பவரின் தலைமையிலான பிரித்தானியக் குழுவின் மலை ஏறக்கூடியவர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.

எரிக் ஷிப்டான் தலைமையிலான பிரித்தானியக் குழுவில் இடம் பெற்றிருந்த அதன் ஒரு பகுதியாக எட்மண்ட் ஹிலாரியும் ஜியார்ஜ் லோவே என்பவரும் சோ ஒயு மலையேற முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அதன் பிறகு இக்குழு இமயமலை ஏறும் முயற்சியைத் தொடங்கியது . ஆனால் அவையும் தோல்வியில் தான் முடிந்தன.

1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது.

எட்மண்ட் 1953 ஆம் ஆண்டு மேரி ரோஸ் என்பவரை மணம் முடித்தார். அவர் மூலமாக ஒரு மகனையும் இரு மகள்களையும் பெற்றெடுத்தார். 1975ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அவரது மனைவியும் ஒரு மகளும் பலியாயினர். 1989 ஆம் ஆண்டு ஜீன் மல்க்ரூ என்பவரை மணம் முடித்தார்.

இவர் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு இருக்கிறார். நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி இருக்கிறார். "எப்படி இப்படிப்பட்ட சாதனைகள் செய்கிறீர்கள்? " எனக் கேட்ட பொழுது," இயல்பான எளியவன் நான்! புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான். அசாதாரணமான கனவுகளைக் கண்டு அசாதாரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன்! சிம்பிள்" என்றார் புன்னகையுடன். தனது முயற்ச்சிகளால் வெற்றி அடைந்து உலகத்தை தன் பால் திரும்பிக் பார்க்க வைத்த எட்மண்ட், தனது 88 ஆம் அகவையில் இதயநோயினால் காலமானார்.