உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது

உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது

bookmark

விளக்கம் :

சோற்று உலையை அனல் குறைவாக வைத்து மூடி போட்டு வெளியில் பொங்கி வராமல் அதனை சமைத்துவிடலாம். ஆனால் நம்மைப் பற்றிய ஒரு ரகசியத்தை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை பத்து பேரிடமாவது கூறினால்தான் அவருக்கு தூக்கம் வரும். அந்த பத்து பேர் மேலும் பலரிடம் கூறுவர். இப்படியாக ஊர் முழுக்க அந்த விஷயத்தைப் பற்றிதான் பேசுவார்கள். அதனை தடுத்து உங்கள் ரகசியத்தைக் காக்க முடியுமா? ஊர் வாயை மூட முடியாது. இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.