ஆல்பர்ட் ஸ்வைட்சர்

bookmark

ஆல்பர்ட் ஸ்வைட்சர் மருத்துவர், பாதிரியார், இசை வல்லுநர், தத்துவ நிபுணர், சமுக சேவகர் என்ற பல முகங்களைக் கொண்டவர். இவர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரும் கூட. எல்லா மதங்களின் மீதும் ஈடுபாடு கொண்டவர். அதனால் தான் எல்லா மதக் கருத்துக்களையும் ஆர்வத்துடன் படித்து தெரிந்து கொண்டார்.இவர் வாழ்ந்த காலத்தில் உலகப் போர் நடந்து வந்தது. இவர் அப்போது மனைவியுடன் போர் கைதியாக கைது செய்யப்பட்டார் இருந்தும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசு அனுமதியுடன் தன்னால் ஆன எல்லா மருத்துவ உதவிகளையும் செய்தார்.இன்று பணம் சம்பாதிக்கவே சிலர் மருத்துவர் ஆகின்றனர். ஆனால், இவரோ அக்காலத்தில் சேவை செய்வதற்காகவே மருத்துவர் ஆனவர்.

ஆப்ரிக்காவில் தனது மருத்துவ சேவையை செய்யத் தொடங்கினார். சமண மதத்தின் கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். "reverence of Life " என்ற தத்துவத்தைக் கொண்டு வந்தார். இந்த தத்துவத்தின் படி "உயிர் என்பது காக்க! அழிக்க அல்ல.வாழ்தலின் அறம் உயிர்களைக் காத்தலும், பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமலும், கொல்லாமலும் இருக்க வேண்டும்" என்பது தான். தனது இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆப்ரிக்காவில் லம்பாரனே எனும் இடத்தில் மருத்துவ மனையை தொடங்கினார்.

அவரது அன்பில் உருவான அந்தப் புதிய கொள்கையை ஆப்ரிக்க மக்களுக்கு போதித்து அவர்களுக்கு புரியவைத்தார்.அங்கு அன்பு பாராட்டி, அமைதியை பரப்பினார், இதன் காரணமாக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசில் தனக்குக் கிடைத்த தொகையைக் கூட தொழுநோய் சிகிச்சை மையத்தை ஆப்ரிக்காவில் அமைக்க பயன் படுத்திக் கொண்டார். மொத்தத்தில் இவரே இந்த உலகத்துக்கு ஒரு அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தார். அதன் மூலம் உலகத்தின் பல்வேறு அமைப்புகள் இவரை பின் பற்றும் படி செய்தார்.