ஆப்பிள்
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்தசோகை நோய் கட்டுப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.
செரிமான மண்டலம் சீராக இயங்க, நினைவாற்றல் அதிகரிக்க, குடற்கிருமிகளை அழிக்க, நரம்புத் தளர்ச்சி நீங்க, நல்ல தூக்கம் வர ஆப்பிள் உதவுகிறது. மேலும் இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது.
ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்து உடலை பாதுகாக்கிறது.
கண்புரை நோய்க்கு சிறந்த தீர்வாக ஆப்பிள் அமைந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளர்களுக்கும் ஆப்பிள் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
