தீநகர்

bookmark

ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலி 
      இல்லில் லினுக்கு முளதாய், 
இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர் 
      எங்கும்நட மாட்டம் உளதாய்க், 
கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக் 
      காய்ச்சல்தப் பாத இடமாய், 
கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற 
      கற்கேணி நீருண் பதாய். 
மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற 
      மணியம்ஒன் றுண்டா னதாய், 
மாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு 
      வாழ்வதிலும், அருக ரகிலே
ஆனநெடு நாள்கிடந்தமிழ்தலே சுகமாகும் 
      அமலனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!