'கூழ்'ட்ரிங்ஸ்

bookmark

"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"

"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!

"பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.."

"சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"

"தலைவருக்கு எத்தனை மனைவி?"

"சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"

மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை.

ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு....

கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?

மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?