வாழ்க்கை
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மனம் முடித்ததாக அறியப்படுகிறது [2]. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
