வாசனம்

bookmark

உங்க பையன் எதிர்காலத்துல பெரிய கிரிக்கெட் பிளேயரா வருவான்னு தோணுது!

அப்படியா எப்படி சொல்றீங்க?

வரலாறு பாடத்துல அவன் ஃபெயில் ஆவறதுக்கு நான் எவ்வளவு காசு தருவேன்னு கேக்கறான்.

ஒருவன்: அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டை திறப்பதற்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். 

மற்றவன்: என்னது படத்துக்கு அவ்வளவு கூட்டமா?!!!

ஒருவன்: இல்லப்பா, படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி வரவங்களுக்கு வெளியே போறதுக்கு கேட்டை திறக்க லஞ்சம் கேட்கிறார்கள்.

அம்மா: ஏன்டா இந்த வருஷம் ஃபெயிலான?

மகன்: 12 வருடம் கடுமையா படிச்சதுக்கு ஆசிரியர்களாக பார்த்து ஓய்வு குடுத்திருக்காங்க. (அரசியல் பாணியில்)

அம்மா: ????????????

அப்பா: உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்?

மகள்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும்

அப்பா: ?!?!?

"அந்த பட்டாசுக்காரருக்கு ரொம்பத் தான் துணிச்சல்!"

"ஏன்?"

"ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கறவங்களுக்கு உண்மையான வெடிகுண்டு இரண்டு இனாமா தரப்படும்னு விளம்பரம் செஞ்சிருக்காரே."