வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்க் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு[1], 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
