வரைக்காட்சிப் படலம் - 952
அம் மலையின் வருணனை ((952-960))
சிறந்த மலைக் காட்சிகள்
கலிவிருத்தம்
952.
ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும். மாழை இளந் தளிரே - இடை.
மானும். வேழமும். நாகமும். மாதர் தோள்
மானும் வேழமும். நாகமும் - மாடு எலாம்.
இடை ஈனும் - (அம் மலையின்) நடுப்பாகத்தில் தளிர்க்கின்ற;
மாழை இளந்தளிர் ஏய் - மாமரத்தின் இளைய தளிரையொத்த; ஒளி
ஈனும் மாழை - ஒளியைத் தரும் பொன்னின்; இளந் தளிரே -
மெல்லிய தகடுகளாகும்; மாடு எலாம் - அந்த மலையின்
பக்கங்களிலெல்லாம்; மானும் வேழமும் - மானும் யானையும்; நாகமும்
- பாம்பும்; மாதர் தோள் மானும் - மகளிரின் தோளையொத்த
தன்மையைக் கொண்ட; வேழமும் நாகமும் - மூங்கில்களும்
சுரபுன்னை மரங்களும் (உள்ளன).
யமகம் என்னும் மடக்கணி. மாழை: மாமரம். பொன். நாகம்: பாம்பு.
சுரபுன்னை. 25
