லோக் பால்
"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
"தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடணுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
"தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?"
"அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட 'வெயிட்'டை காண்பிக்கவாம்!"
"பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்."
"அப்புறம் என்னாச்சி...?"
"பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்."
ஒருவர்: "ஜாக்கிரதையா இல்லனா வேற யாராவது நம்ம செக்ல கையெழுத்து போட்டு, பணத்த எடுத்துருவாங்க."
மற்றொருவர்: "வேற யாரும் கையெழுத்து போடக்கூடாது என்பதற்கு தான் நானே எல்லா செக்லயும் கையெழுத்து போட்டு வச்சுட்டேன்." (வசதியா இருக்கும் பணம் எடுக்குறதுக்கு)
