லைட் மியூசிக்

bookmark

"டேம்லே வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே! ஏன்?"

"தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?"

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?

மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்!


"அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே?"

"அதான் கொக்கு நறநற கோழி நறநற...ன்னு பாடுறாரே!"

"தேங்காயிலும் தண்ணீர் இருக்கு........பூமியிலும் தண்ணீர் இருக்கு......"

"அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா....... இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா.......இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்....."

ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறார்கள்

ஸ்டாலின்: நான் ஒரு நூறு ரூபாயை கீழே போடப்போறேன் ஒரு ஆள் சந்தோசப்படுவான்.

கனிமொழி: நான் இரண்டு ஐம்பது ரூபாயை கீழே போடப்போறேன் இரண்டு பேர் சந்தோசப்படுவாங்க.

அழகிரி: நான் நூறு ஒரு ரூபாயை கீழே போடப்போறேன் நூறு பேர் சந்தோசப்படுவாங்க.

விமானி: உங்க மூணு பேரையும் தூக்கி கீழே போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்.....