முசோலியின் மரணம்

முசோலியின் மரணம்

bookmark

28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். 29 ஏப்ரல், 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.