மிதிலைக் காட்சிப் படலம் - 598
இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர்
கண்டுகொள்ளல்
598.
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
எண்ண அரு நலத்தினாள்- அழகின் எல்லை இதுதான் என
மனத்தால் நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை; இனையள்
நின்றுழி - இத் தன்மையுடையவளாய் நின்றபொழுது்; கண்ணொடு
ஒருவர் கண்களோடு்; கண்இணை - மற்றொருவர் கண்கள்; கல்வி
- கவர்ந்து பற்றிக்கொண்டு்; ஒன்றை ஒன்று உண்ணவும் - ஒன்றை
ஒன்று கவர்ந்து சுவைக்கவும்; உணர்வும் - இருவரது அறிவும்; நிலை
பெறாது - (தம்தம் இடங்களில்) நிலைபெற்று இருக்காமல்;
ஒன்றிட (ஒன்றையொன்று கூடி) ஒன்றுபடவும்; அண்ணலும்
நோக்கினான் - இராமனும் (சீதையைப்) பார்த்தான்; அவளும்
நோக்கினாள் - சீதையும் (இராமனைப்) பார்த்தாள்.
இராமனும் சீதையும். இராமனது பார்வை சீதைமேல் செல்ல. அவள்
கண் இராமன் மேல் பாய். அப்போது இருவரது மனவுணர்ச்சியும்
ஒன்றுபட்டு ஒரு தன்மைத்தான காதலைக் கொண்டது புலனாகும். 35
