மஜின் வணிக நிறுவனம்

மஜின் வணிக நிறுவனம்

bookmark

திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக 350 sq ft (33 m2)அது இருந்தது. ஆரம்பத்தில், தங்களுக்கு வணிகத்தில் உதவ இரண்டு உதவியாளர்களை அவர்கள் அமர்த்திக் கொண்டனர். 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். இருவரும் வெவ்வேறான வணிக மனோநிலை கொண்டிருந்தனர் என்றும் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர் என்றும் நம்பப்படுகிறது. திரு.தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். திருபாய் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாதவர். அவர் கையிருப்புகளை குவித்து, விலை உயர்வை எதிர்நோக்கி, லாபத்தை குவிப்பதில் நம்பிக்கையுற்றிருந்தார்.[8]() 1968-ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு விலையுயர்ந்த மாளிகை வீட்டிற்கு அவர் இடம் பெயர்ந்தார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1970களின் பிற்பகுதியில் சுமார் 10 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

"அவரது மனிதவள நிர்வாகத் திறன் அபாரமானது. அவர் எப்போதும் 'திறந்த கதவு' கொள்கையைப் பின்பற்றினார். ஊழியர்கள் அவரது அறைக்குள் சென்று தங்களது பிரச்சினைகளை அவருடன் நேரடியாக விவாதிக்க முடியும். ஊழியர்களோ, பங்குதாரர்களோ, பத்திரிகையாளர்களோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ யாராயிருந்தாலும் சரி, வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு என தனி வகை கையாளும் முறைகளை அம்பானி கொண்டிருந்தார்.” என்று ஆசியா டைம்ஸ் மேற்கோளிடுகிறது[2]: அதிகாரிகளை விலைக்கு வாங்கி சட்டங்களை தனக்கு பொருந்தும் வகையில் மாற்றி எழுதிக் கொண்டார் என அம்பானியின் போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வணிகம் தொடங்கிய நாட்களையும், இந்திய அதிகார மைய கட்டுப்பாடுகள் அப்போது இருந்த குறைபாடுகளுடனான அமைப்பை பயன்படுத்தி பொருளீட்டும் கலையில் அவர் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பதையும் அவர்கள் நினைவு கூறுகின்றனர். மிளகாயை அவர் ஏற்றுமதி செய்தார், பல சமயங்களில் இதில் நஷ்டம் தான் இருக்கும், மறுநிரப்பல் உரிமங்களை ரேயான் இறக்குமதி செய்ய அவர் பயன்படுத்திக் கொண்டார். பின் ரேயான் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட துவங்கிய பின், மீண்டும் அவர் ரேயான் ஏற்றுமதி செய்தார், இதுவும் நஷ்டத்தில் செய்து நைலானை இறக்குமதி செய்தார். அம்பானி எப்போதும் தனது போட்டியாளர்களை விட ஒரு அடி முன்னால் நின்றார். அவர் இறக்குமதி செய்த பொருட்களுக்கு பெரும் தேவை இருந்ததால், அவரது லாப விழுக்காடு 300 சதவீதத்துக்கு குறைவது என்பதே அரிதாகத் தான் நிகழ்ந்தது."