
மசாலா டீ வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற

மசாலா டீ வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும்.
அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள்.