போலி டாக்டர்
1. "லோன்ல மாடு வாங்கிட்டு, கட்டாம போனா, என்ன ஆகும்னு தெரியுமா?"
"தெரியும் ஐயா.... மாடு தொலஞ்சிடும்!"
க.ஜெயக்குமார்
2. "என்ன இது.... போருக்குப் போற நேரத்துல மன்னர் தேர்ல ஏதோ எழுதிக்கிட்டு இருக்கார்?"
"தேர்ல "காளி து€ணு"ன்னு இருக்கே.... அதுக்கு பக்கத்துல "காலும் துணை"ன்னு எழுதிக்கிட்டு இருக்கார்!"
ப.விஜயகுமார்
3. "நம்ம கிராமத்துக்கு வந்து இருக்கும் பயிற்சி டாக்டர் ஒரு போலின்னு நினைக்கிறேன்."
"எப்படிச் சொல்றே?"
"பக்கத்து கிராமத்துல மலேரியா பரவுதுனு சொன்னதும், நம்ம கிராமத்தைச் சுற்றி காம்பவுண்ட் கட்டச் சொல்றாரு."
க.கலைவாணன்
4. "எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
