பொருளாதாரக் கொள்கைகள்
நேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார், மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையைப் பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்றத் திட்டங்களைக் குடிசைத்தொழில்களை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை "இந்தியாவின் புதுக் கோவில்கள்" என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
பிரதம மந்திரியாக நேரு பதவி வகுத்த காலத்தில் பெரும்பாலான காலங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்தும், முன்னேறி இருந்தும் கூட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருந்தது. நேருவின் தொழிற்சாலை கொள்கைகள் "தொழிற்சாலை கொள்கை தீர்வு " 1956 மாறுபட்ட உற்பத்திகள் மற்றும் கனரக இயந்திரங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தது.[7] இருப்பினும் மாநிலத்திட்டம், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றினால் உற்பத்தி, தரம் மற்றும் லாபம் முடங்கத் தொடங்கின. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.5% என்ற நிலையான வளர்ச்சி தரத்தை எட்டினாலும், கடுமையான வேலையில்லா திண்டாட்டம், பரவலான வறுமை மக்களைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது.
