பேச்சாளர்
வின்சுடன் சர்சில் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். இவர் தான் உரையாற்றும் முன்னர் தான் பேசப்போகும் விடயங்களை பயிற்சி எடுத்துக் கொண்டே பேசும் பழக்கம் உள்ளவர். இவர் ஆற்றிய உரைகளில் சில மேற்கோள்களாகக் காட்டப்படுவது உண்டு. அதில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
"கடலில் போரிடுவோம்; விண்ணில் போரிடுவோம்; மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம்; பள்ளத்தாக்குகளிலும், அகழிகளிலும் போரிடுவோம்; தெருக்களில் போரிடுவோம்; சந்துக்குச் சந்து, வீட்டுக்கு வீடு போரிடுவோம்; ஆனால் ஒரு போதும் சரணாகதி அடையமாட்டோம்."
